சதாப்தி, துரந்தோ, ராஜ்தானி ரயில்களில் சிசிடிவி கேமராக்கள்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ஆகிய அதிவேக ரயில்களின் அனைத்துப் பெட்டிகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள்(சிசிடிவி) பொருத்தப்படும் என்று வடக்கு

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ஆகிய அதிவேக ரயில்களின் அனைத்துப் பெட்டிகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள்(சிசிடிவி) பொருத்தப்படும் என்று வடக்கு ரயில்வே பொது மேலாளர் விஸ்வேஷ் செளபே கூறினார்.
இதுதொடர்பாக, தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 26 சதாப்தி ரயில்கள், 23 ராஜ்தானி ரயில்கள், 18 துரந்தோ ரயில்கள் ஆகிய அதிவிரைவு ரயில்களில், ஒவ்வொரு பெட்டியின் இரு நுழைவாயில்களிலும் தலா ஒரு கேமரா, உட்புறத்தில் 2 கேமராக்கள் என மொத்தம் 4 கேமராக்கள் பொருத்தப்படும்.
மொத்தம் 11,000 ரயில்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதற்கு மத்திய பொது பட்ஜெட்டில் (2018-19) ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிவிரைவு ரயில்கள் மட்டுமன்றி, அனைத்து முக்கிய ரயில்களிலும், புறநகர் ரயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், நாடு முழுவதும் உள்ள 8,500 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார் அவர்.
கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.53,989 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2018-19-ஆம் நிதியாண்டில் ஏறத்தாழ மும்மடங்கு தொகை, அதாவது, ரூ.1,48,528 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 
எனவே, பயணிகளின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.73,065 கோடி செலவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com