நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை! 

மர்ம மரணம் அடைந்த சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டுமென்று ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ராகுல் காந்தி தலைமையில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். 
நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை! 

புதுதில்லி: மர்ம மரணம் அடைந்த சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டுமென்று ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ராகுல் காந்தி தலைமையில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். 

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்தபோது ஷொராபுதீன் என்பவர் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இவ்வழக்கை மும்பை சி.பி.ஐ நீதிபதி லோயா விசாரித்து வந்த நிலையில், அவர் திடீரென சந்தேகத்துக்கிடமான முறையில்  மாரடைப்பால் மரணமடைந்தார். இதன் பின்னர் அந்த வழக்கை விசாரித்த வேறு நீதிபதி ஒருவர் அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார் 

அதனைத் தொடர்ந்து நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கபில் சிபில், குலாம் நபி ஆசாத், டி ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவினை அமைக்க வேண்டும் என்று கோரி 15 கட்சிகளைச் சேர்ந்த 114 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com