பிரதமர் மோடி எழுதிய புத்தகம் விறுவிறுப்பான விற்பனை

மாணவர்கள் தேர்வுகளை பதற்றமின்றி எதிர்கொள்வதற்கு யோசனைகளை வழங்கி, பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள "எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற ஆங்கிலப் புத்தகம் கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில்

மாணவர்கள் தேர்வுகளை பதற்றமின்றி எதிர்கொள்வதற்கு யோசனைகளை வழங்கி, பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள "எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற ஆங்கிலப் புத்தகம் கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது.
பிரதமர் மோடி எழுதிய அந்தப் புத்தகத்தை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டாக வெளியிட்டனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் தொடங்கியுள்ள புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளது.
பள்ளிகளில் தேர்வுகள் நெருங்கி வருவதால், எக்ஸாம் வாரியர்ஸ், புத்தகத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ள "பென்குயின் ராண்டம் ஹவுஸ்' பதிக்கத்தின் கொல்கத்தா பிரிவு மேலாளர் என்.ராய் சௌத்ரி கூறியதாவது:
பிரதமர் எழுதிய புத்தகத்தை அனைத்து வயது பிரிவினரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தனிப்பட்ட முறையில் நானும் ஒரு புத்தகம் வாங்கினேன். கடந்த சில தினங்களில் மட்டும் 500 புத்தகங்கள் விற்றுத் தீர்த்துவிட்டன என்றார் ராய் சௌத்ரி.
எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தின் விலை ரூ.100. இந்தக் கண்காட்சியில் 10 சதவீத கழிவுடன் விற்
பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com