விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்கு உயர்வு

ஒலிம்பிக் போட்டி,  ஆசிய விளையாட்டுப் போட்டி, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக  
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்கு உயர்வு

ஒலிம்பிக் போட்டி,  ஆசிய விளையாட்டுப் போட்டி, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக  மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது:
விளையாட்டுப் போட்டுகளில் பங்குபெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதிய தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .

அதன்படி ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வீதியம் ரூ. 10000 லிருந்து ரூ.20000 ஆகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 8000 லிருந்து 16000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com