சிறப்பான நிலையில் பிரிட்டிஷார் கால ரயில் பாலங்கள்

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியர்களால் கட்டப்பட்ட ரயில் பாலங்களின் நிலையைக் காட்டிலும், காலனியாதிக்கத்தின்போது பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட சில ரயில் பாலங்களின் நிலை சிறப்பாக இருப்பதாக நாடாளுமன்ற

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியர்களால் கட்டப்பட்ட ரயில் பாலங்களின் நிலையைக் காட்டிலும், காலனியாதிக்கத்தின்போது பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட சில ரயில் பாலங்களின் நிலை சிறப்பாக இருப்பதாக நாடாளுமன்ற குழுவின் அறிக்கையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான பொது கணக்குக் குழு, ரயில் பாலங்கள் பராமரிப்பு தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சில ரயில் பாலங்களின் நிலை சிறப்பாக இருக்கின்றன. அதேநேரத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு கட்டப்பட்ட ரயில் பாலங்கள் அல்லது சீரமைப்பு செய்யப்பட்ட ரயில் பாலங்களின் நிலை மோசமாக இருக்கின்றன. அந்த பாலங்களை தொடர்ந்து சீரமைக்க வேண்டியுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் இடையே நிலவும் கூட்டு, ரயில் பாலங்கள் தரமாக கட்டப்படுவதிலும், ரயில் பாலங்களின் ஆயுட்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ரயில் பாலங்கள் கட்டுவது அல்லது சீரமைப்பு செய்வது தொடர்புடைய பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள், மின்னணு முறையில் விடப்பட வேண்டும். அப்படிச் செய்வதால், ஒப்பந்தப் புள்ளிகள் விடும் முறையில் வெளிப்படைத்தன்மை ஏற்படும். அதேபோல், ஒப்பந்தப் புள்ளிகளை எடுப்பதிலும் அதிக எண்ணிக்கையில் தகுதியானோர் பங்கேற்க முடியும்.
தரமான ரயில் பாலங்களை கட்டுவதில் தோல்வியடைவோருக்கு, எதிர்காலத்தில் ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அத்தகைய நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.
ரயில்வே வாரியத்தால் 3,979 பாலங்களுக்கான பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி 710 பாலப்பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன. ரயில் பாலங்கள் தொடர்பான பணிகளைச் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்காமல் போவதற்கு நிதி பற்றாக்குறையும் முக்கியக் காரணமாகும். ரயில் பாலப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் செய்யும் காலதாமதமானது, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com