ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ஜேட்லி மீது ராகுல் மீண்டும் தாக்கு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வெள்ளிக்கிழமை விமர்சித்தார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ஜேட்லி மீது ராகுல் மீண்டும் தாக்கு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வெள்ளிக்கிழமை விமர்சித்தார்.
இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத் துறைக்கு கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதத் தளவாடங்கள் தொடர்பான ஒப்பந்த விவரங்களை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒருபோதும் வெளியிட்டதில்லை என்று நாடாளுமன்றத்தில் நீங்கள் வியாழக்கிழமை குற்றம் சாட்டியிருந்தீர்கள். அந்த ஒப்பந்தம் தொடர்பாக, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதில்களின் விவரத்தை இந்தச் சுட்டுரைப் பக்கத்தில் இணைத்திருக்கிறேன். அதில், ஆயுதத் தளவாடங்களின் விலை வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
இதேபோல், ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சுட்டுரைப் பதிவில், ஜேட்லி என்ற வார்த்தையை உண்மைகளைப் பேசாதவர் என்று பொருள்படும் வகையில், ஆங்கிலத்தில் "Dear Mr Jaitlie"  குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com