காதலர் தினத்தன்று வளாகத்தில் சுற்றித் திரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை: பல்கலையின் வினோத சுற்றறிக்கை!

காதலர் தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுற்றித் திரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற லக்னௌ பல்கலைகழகத்தின் வினோத சுற்றறிக்கையினால்... 
காதலர் தினத்தன்று வளாகத்தில் சுற்றித் திரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை: பல்கலையின் வினோத சுற்றறிக்கை!

லக்னௌ: காதலர் தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுற்றித் திரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற லக்னௌ பல்கலைகழகத்தின் வினோத சுற்றறிக்கையினால் மாணவர்கள் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை உலகெங்கும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், லக்னௌ பல்கலைக்கழக  நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு  இருப்பதாவது:-

மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடுகின்றனர். ஆனால் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே எந்த சிறப்பு வகுப்பும் நடைபெறாது.

முன்னரே திட்டமிடப்பட்டுள்ள பிராக்டிகல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். எனவே தொடர்பற்ற பிற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது.

மாணவர்களை அவர்களின் பெற்றோர்களும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் ஜோடியாக உட்கார்ந்திருந்தாலோ நடமாடினாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த சுற்றரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com