தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்வு

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களின் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.


புது தில்லி: உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களின் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

'உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்துக்கு நிகராக தேர்தல் ஆணையர்களுக்கு ஊதியம்' வழங்க வகை செய்யும் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட 3 தேர்தல் ஆணையர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

இதன்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் சம்பளம் மாதம் ரூ.2.80 லட்சமாக உயர்ந்துள்ளது. இப்போது அவரது சம்பளம் ரூ.1 லட்சமாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகளின் மாதச் சம்பளம் ரூ.90,000-ஆக உள்ளது. இது மாதம் ரூ.2.50 லட்சமாக உயர்ந்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000 உள்ளது. இது மாதம் ரூ.2.25 லட்சமாக உயர இருக்கிறது. 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. 2016 ஜனவரி 1 முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும். இதன் மூலம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சுமார் 2,500 பேரும் பயனடைவார்கள்.

இதன் மூலம், தற்போது ரூ.90 ஆயிரத்தை ஊதியமாக பெற்று வந்த தேர்தல் ஆணையர்களின் ஊதியம் தற்போது ரூ.2.50 லட்சமாக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com