ராணுவ வீரர்களிடையே மத வேறுபாடு பார்ப்பதில்லை: ஹைதராபாத் எம்.பிக்கு ராணுவ தலைமை அதிகாரி ஆவேச பதில்! 

நாட்டுக்காகப் போராடும் ராணுவ வீரர்களிடையே மத வேறுபாடு பார்ப்பதில்லை என்று ஹைதராபாத் எம்.பியின் விமர்சனத்திற்கு ராணுவ வட பிராந்திய தலைமை அதிகாரி தேவராஜ் அன்பு ஆவேச பதில் அளித்துள்ளார்.
ராணுவ வீரர்களிடையே மத வேறுபாடு பார்ப்பதில்லை: ஹைதராபாத் எம்.பிக்கு ராணுவ தலைமை அதிகாரி ஆவேச பதில்! 

ஜம்மு: நாட்டுக்காகப் போராடும் ராணுவ வீரர்களிடையே மத வேறுபாடு பார்ப்பதில்லை என்று ஹைதராபாத் எம்.பியின் விமர்சனத்திற்கு ராணுவ வட பிராந்திய தலைமை அதிகாரி தேவராஜ் அன்பு ஆவேச பதில் அளித்துள்ளார்.

ஐ.எம்.ஐ.எம். கட்சி ஹைதராபாத் எம்.பியான அசாதுதீன் ஒவைசி செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் நாட்டுப்பற்றை பற்றிக் கேள்வி எழுப்புபவர்கள், சமீபத்திய சஞ்சுவன் ராணுவ முகாம் தாக்குதலில் உயிரிழந்த இஸ்லாமிய ராணுவ வீரகள் பற்றி பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய படையணிகளின்  பொதுத் தலைமை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனெரல் தேவராஜ் அன்பு, ஜம்முவில் புதனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

ராணுவத்தில் நாங்கள் எந்த விதமான மத பேதமும் பார்ப்பது கிடையாது. அவ்வாறு பேசுபவர்கள் ராணுவத்தின் செயல்பாடுகளை முழுமையாக அறியாதவர்கள்.

ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் தொடர்ந்து தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து வருவது கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயமாகும்.

தற்சமயம் இலைகர்களிடம் பிரிவினைவாத மனப்பான்மையைத் தூண்டுவதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com