ஹைதராபாத்தில் கர்ப்பிணி கொலை: குற்றவாளியை அடையாளம் கண்டது காவல்துறை

8 மாத கர்ப்பிணிப் பெண் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தீவிர விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் கர்ப்பிணி கொலை: குற்றவாளியை அடையாளம் கண்டது காவல்துறை


ஹைதராபாத்: 8 மாத கர்ப்பிணிப் பெண் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தீவிர விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

கொலையுண்ட பெண்ணின் கணவரும், கணவரின் காதலியும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர்கள் தலைமறைவாகிவிட்டதும் தெரிய வந்துள்ளது. பிகாரைச் சேர்ந்த பிங்கி என்ற பெண்தான் கொலையானவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை நடந்து சில வாரங்கள் ஆன நிலையில், சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களிலும் பதிவான காட்சிகளையும் தொடர்ந்து சோதித்த காவல்துறையினர், குற்றவாளிகள் இரண்டு பேரும் இரு சக்கர வாகனத்தில் செல்வதைக் கண்டுபிடித்தனர்.

மஸ்ஜித் பான்டா சாலையில், ஒரு பெண் உட்பட இரண்டு பேர் மிகக் கனமான பையை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு ஓட்டிச் செல்லும் காட்சியை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

2 வாரங்களுக்கு முன்பு, பொடானிகல் கார்டன் பகுதிக்கு அருகே சாலையோரத்தில் கர்பிணிப் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் அடையாளமோ குற்றவாளிகள் பற்றியோ எந்த துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு பெரிய நம்பிக்கையை அளித்தது.

மிகக் கனமான பையுடன் இரண்டு பேர் பைக்கில் செல்கிறார்கள். இதில், பின் இருக்கையில் இருக்கும் பெண் அந்த பையை கையில் பிடித்துள்ளார். 

கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, கொலைச் சம்பவம் சித்திக் நகர் அல்லது அஞ்ஜையா நகரில் நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். பொடானிகல் கார்டன் பகுதியில் அதிகாலை 3.42 மணிக்கு அந்த உடல் வீசப்படுகிறது. 3.48 மணிக்கு அந்த பைக் மஸ்ஜித் பான்டா சாலையைக் கடந்து செல்கிறது. 

கர்ப்பிணி கொலையில், முதல் துப்பு துலங்கியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் தீவிரம் காட்டி, குற்றவாளிகளையும் அடையாளம் கண்டனர். அவர்கள் பிங்கியின் கணவர் விகாஸ் காஷ்யப் மற்றும் அவரது காதலி அமர்காந்த் ஜா என்பது தெரிய வந்தது. குற்றவாளிகள் தற்போது தலைமறைவாக உள்ளனர். அமர்காந்தின் பெற்றோர் மம்தா ஜா மற்றும் அனில் ஜா இருவரையும் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. 

கர்பிணியின் உடல் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டதால், அவரது உறவினர்கள் கூட அவரது உடலை அடையாளம் காண முடியாது என்பதால் அவரது டிஎன்ஏவும், அவரது வயிற்றில் இருந்த கருவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

கொலையுண்ட பெண் மரணம் அடைவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது ஜனவரி 28ம் தேதி கச்சிபௌலியில் உள்ள உடுப்பி ஹோட்டலுக்கு வந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் அடையாளம் கூறியிருந்தனர்.

கொலையுண்ட பெண்ணின் மாதிரிப் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, இவரைப் பற்றி தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தியிருந்ததோடு, குற்றவாளிகளைப் பற்றி தகவல் அளிப்போருக்கு சன்மானமும் அறிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com