அக்டோபர் 31-இல் வல்லபபாய் படேல் சிலை திறப்பு: குஜராத் அரசு

குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபபாய் படேலின் சிலையின் திறப்பு விழா அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் 31-இல் வல்லபபாய் படேல் சிலை திறப்பு: குஜராத் அரசு

குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபபாய் படேலின் சிலையின் திறப்பு விழா அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
நர்மதை நதியில் இருக்கும் சர்தார் சரோவர் அணையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சாது பேட்டில் வல்லபபாய் படேல் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு குஜராத் தலைமைச் செயலாளர் ஜே.என். சிங் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிலை அமைக்கப்பட்டு வரும் பகுதியில் நடக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தேன். அப்போது குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணியை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
ஒற்றுமையை வலியுறுத்தும் சிலையின் (சர்தார் வல்லபபாய் படேலின் சிலை) திறப்பு விழா, வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நடைபெறும் என்றார் அவர்.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், பல சமஸ்தானங்களாக பிளவுபட்டு கிடந்த நாட்டை ஒன்றாக இணைத்தவருமான மறைந்த சர்தார் வல்லபபாய் படேல் இரும்பு மனிதர் என்று பரவலாக அறியப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான சர்தார் வல்லபபாய் படேலுக்கு நர்மதை அணை அருகே பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். அவர் குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது, இந்த சிலை அமைக்கும் பணிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபரில் அடிக்கல்லை நாட்டினார்.
இந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்க ரூ.3,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு-தனியார் ஒத்துழைப்பு அடிப்படையில் இந்த சிலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com