இடதுசாரி ஆட்சியில் திரிபுரா பின்தங்கிவிட்டது: காங்கிரஸ்

இடதுசாரிகளின் 25 ஆண்டுகால ஆட்சியில் திரிபுரா மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்,
இடதுசாரி ஆட்சியில் திரிபுரா பின்தங்கிவிட்டது: காங்கிரஸ்

இடதுசாரிகளின் 25 ஆண்டுகால ஆட்சியில் திரிபுரா மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது நாட்டுக்கே மிகப் பெரிய ஆபத்தாக அமையும் என்றும் கூறியுள்ளது.
மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வரும் 18-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இடதுசாரி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படும் அந்த மாநிலத்தைப் பொருத்தவரை கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. தற்போது நடைபெறும் தேர்தலிலும் அந்த நிலையே தொடர வேண்டும் என அக்கட்சி தீவிரமாக இயங்கி வருகிறது. மறுபுறம், மார்க்சிஸ்டை வீழ்த்தி அங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுத்து பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸும் தனியே களமிறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழலால் அந்த மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவாண் திரிபுராவில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மாநிலத் தலைநகர் அகர்தலாவில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை பேசியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் இடதுசாரி ஆட்சி நடைபெறுகிறது. போதிய நலத் திட்டங்கள் இல்லை. தொழில் முதலீடுகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. மொத்தத்தில் பொருளாதார ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் பின்தங்கிய மாநிலமாக திரிபுரா உள்ளது. மாநில மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு வேலைவாய்ப்பு இல்லை. எனவே, மாநில அரசியலில் மாற்றம் வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
அந்த மாற்றம் நன்மை பயக்க வேண்டுமே தவிர, தீமைகளுக்கு வித்திடக் கூடாது. பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் அத்தகைய நிலைமைதான் உருவாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com