நேதாஜியின் மரணம் தொடர்பாக உறவினர் எழுதிய புத்தகம் வெளியீடு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அவரது உறவினர் எழுதியுள்ள புத்தகம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அவரது உறவினர் எழுதியுள்ள புத்தகம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
'லெய்ட் டூ ரெஸ்ட்' என்ற பெயரிலான அந்த புத்தகத்தை, லண்டனைச் சேர்ந்த எழுத்தாளரும் நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே எழுதியுள்ளார். தில்லியில் உள்ள பிகேனர் இல்லத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:
நேதாஜி மரணம் தொடர்பாக இந்தியா, ஜப்பான், பிரிட்டன், தைவான் என 4 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 11 விசாரணைகளின் முடிவுகளை எனது புத்தகத்தில் தொகுத்துள்ளேன். கடந்த 1945, ஆகஸ்ட் 18-இல் தைபேயில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்பதே அனைத்து விசாரணைகளின் முடிவாக உள்ளது. எனது புத்தகம், நேதாஜி மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வெள்ளை அறிக்கையாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் அவர்.
மேலும், விமான விபத்து குறித்து பேசிய அவர், 'ஜப்பானிய விமானப் படைக்குச் சொந்தமான அந்த விமானம், தைபேயில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் உடனடியாக நேதாஜி இறக்கவில்லை. அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில மணி நேரங்கள் கழித்தே இறந்தார். அந்த விமானத்தில் மேலும் 13-14 பேர் இருந்தனர். அவர்களில் பாதி பேர் இறந்துவிட்டனர். நேதாஜியின் சாம்பல் ஜப்பானில் உள்ள ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. அதனை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் அவர். முன்னதாக கடந்த 2016, டிசம்பரில் நேதாஜி தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com