லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்கிய பெண் போலீஸ் அதிகாரி: தப்பிக்க நினைத்து சாகசம்! 

லஞ்சம் வாங்கும் பொழுது பிடிபட்டதால், தப்பிக்க எண்ணி லஞ்சப் பணத்தை பெண் போலீஸ் அதிகாரிஒருவர் வாயில் போட்டு விழுங்கிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.
லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்கிய பெண் போலீஸ் அதிகாரி: தப்பிக்க நினைத்து சாகசம்! 

மும்பை: லஞ்சம் வாங்கும் பொழுது பிடிபட்டதால், தப்பிக்க எண்ணி லஞ்சப் பணத்தை பெண் போலீஸ் அதிகாரிஒருவர் வாயில் போட்டு விழுங்கிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்ட்ராவில் கோலாபூர் மாவட்டத்தில் உள்ளது சந்த்காத் காவல் நிலையம். இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அதற்காக தன்னுடைய நன்னடத்தை சான்றிதழ் பெற வேண்டி  சந்த்காத் காவல் நிலையத்தை அணுகியுள்ளர்.அங்கு பணிபுரியும் திபாலி காட்கி என்னும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள்,  சான்றிதழ் வழங்குவதற்காக அந்த இளைஞரிடம் ரூ. 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாய் தெரிகிறது.

அதற்கு ஒப்புக் கொண்ட இளைஞர் நேராக அங்கிருந்து கோலாபூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை அணுகியுள்ளார். அவர்களது ஆலோசனையின்படி ரசாயனப் பொருள் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் திபாலியை  சந்திக்கச் சென்றுள்ளார்.

திபாலி லஞ்ச பணத்தை பெறும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்ய முற்பட்டனர். நிலைமையை உணர்ந்து அதிர்ந்த திபாலி, திடீரென்று தன கையில் வைத்திருந்த லஞ்சப்பணம் 300 ரூபாயை வாயில் திணித்து விழுங்க முயற்சித்துள்ளார்.

சுதாரித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றொரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உதவியுடன் விரைந்து செயல்பட்டு, திபாலி வாயைத் திறந்து பணத்தை மீட்டெடுத்துள்ளார்.பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரது வாயிலிருந்து கைப்பற்றப்பட்ட பாதி கிழிந்த நிலையிலுள்ள ரூபாய் நோட்டுகள் ஆதாரமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com