விவசாயிகள் பிரச்னை: தில்லியில் இருநாள் தேசிய மாநாடு- பிரதமர் மோடி பங்கேற்பு

விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க தில்லியில் 2 நாள் தேசிய மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
விவசாயிகள் பிரச்னை: தில்லியில் இருநாள் தேசிய மாநாடு- பிரதமர் மோடி பங்கேற்பு

விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க தில்லியில் 2 நாள் தேசிய மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தில்லியில் உள்ள புஷா வளாகத்தில் வரும் 19, 20ஆம் தேதி ஆகிய இருநாள்கள் இந்த தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு 2022ஆம் ஆண்டு தேசிய மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய வேளாண் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 20ஆம் தேதி கலந்து கொண்டு பேசவுள்ளார்.
மாநாட்டில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், நிதி ஆயோக் மூத்த அதிகாரிகள், விவசாய விளை பொருள் ஆலோசனை அமைப்பினர், மாநில அதிகாரிகள், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
முதல்நாள் மாநாட்டில், வேளாண் துறை நிபுணர்கள், அதிகாரிகள் ஆகியோர் விவசாயிகள் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு குறுகிய கால மற்றும் நிரந்தர தீர்வை தருவது குறித்தும், 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகள், மாநாட்டில் பிரதமர் மோடி 20ஆம் தேதி கலந்து கொள்ளும்போது அவரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தல்களை விரைவில் சந்திக்க இருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் விவசாயிகளுக்கு ஏற்கெனவே சலுகைகளை அறிவித்து விட்டன. மத்திய அரசும் தனது 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 சதவீதம் அதிகரிப்பதாக தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com