மல்லையாவின் ஒரு வாரச் செலவுக்கு ரூ.16 லட்சம்: லண்டன் நீதிமன்றம் ஒதுக்கீடு

லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ள இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ஒரு வார வாழ்க்கைச் செலவுக்கு ரூ.16 லட்சத்தை ஒதுக்கி அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லையாவின் ஒரு வாரச் செலவுக்கு ரூ.16 லட்சம்: லண்டன் நீதிமன்றம் ஒதுக்கீடு

லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ள இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ஒரு வார வாழ்க்கைச் செலவுக்கு ரூ.16 லட்சத்தை ஒதுக்கி அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லையாவின் ரூ.10,210 கோடி மதிப்பிலான சொத்துகளை லண்டன் நீதிமன்றம் ஏற்கெனவே முடக்கிவிட்டது. எனவே, பிரிட்டன் அரசு விதிகளின் அவரது வாழ்க்கைச் செலவுக்காக நீதிமன்றம் நிதி ஒதுக்குவது வழக்கம். அதன்படி மல்லையாவின் ஒருவாரச் செலவுக்கு ரூ.4.5 லட்சம் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தனது வாழ்க்கைச் செலவுக்குக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் அவரது ஒரு வார வாழ்க்கைச் செலவை சுமார் 3 மடங்கு உயர்த்தி ரூ.16 லட்சமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான மல்லையா, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவருடைய செலவுக்கு வாரம் ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்திய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டுமென்று பிரிட்டீஷ் அரசுக்கு மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் கடந்த ஆண்டு ஏப்ரலில் அவர் சரணடைந்தார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com