2019-க்குள் 5 கோடி வேலைவாய்ப்புகள்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உறுதி

அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் 5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நலத் துறை இணையமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2019-க்குள் 5 கோடி வேலைவாய்ப்புகள்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உறுதி

அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் 5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நலத் துறை இணையமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் நலனுக்கான கலந்துரையாடல் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
அதில் கிரிராஜ் சிங் பேசியதாவது:
மாதாந்திர ஊதியத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதைக் காட்டிலும் சுய வேலைவாய்ப்புகளையும், தொழில்முனைவோர்களையும் உருவாக்குவதே சிறந்த நடவடிக்கை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையிலேயே அரசின் செயல் திட்டங்களையும் வகுத்து வருகிறது.
பக்கோடா விற்பது கூட ஒரு வேலைவாய்ப்புதான் என அண்மையில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்தும் அந்த நிலைப்பாட்டைக் கொண்டதுதான். ஆனால், எதிர்க்கட்சிகள் அதைத் தவறாகச் சித்திரித்து பிரசாரம் செய்கின்றன. 
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பதன் மூலம் புதிய தொழில்முனைவோர்கள் உருவாகின்றனர். அவர்கள் பிறருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றனர். வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்துவதில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முதன்மையாக உள்ளன. 
மொத்த வாராக் கடன் விகிதத்தில் சிறு, குறு நிறுவனங்கள் தரப்பிலிருந்து வசூலாகாத தொகை வெறும் 1.5 சதவீதம் மட்டுமே. அடுத்த ஆண்டுக்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் கிரிராஜ் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com