முத்தம் கொடுக்க அனுமதியும், விழாவும் எதற்கு? துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு

முத்தம் கொடுக்க அனுமதியும், முத்த விழாவும் எதற்கு என்று துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
முத்தம் கொடுக்க அனுமதியும், விழாவும் எதற்கு? துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு

ஆர்.ஏ.பொட்டர் வர்த்தகக் கல்லூரி தனது பவள விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது அதனை சிறப்பிக்கும் விதமாக துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நமது நாடாளுமன்றத்தை தாக்கிய முகமது அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் ஜம்மு-காஷ்மீரில் போராட்டங்களை நடத்தினர். இதனிடையே பிப்ரவரி 9, 2013-ல் தில்லி திகார் சிறையில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதுபோல தற்போது மாட்டிறைச்சி மற்றும் முத்தம் ஆகியவற்றுக்கு விழா கொண்டாடி வருகின்றனர். உங்களுக்கு மாட்டிறைச்சி வேண்டுமென்றால் அதை நீங்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம். அதற்கெல்லாம் எதற்கு விழா கொண்டாடுகிறீர்கள். 

அதுபோல முத்தம் கொடுப்பதற்கும் விழா நடுத்துகிறீர்கள். அதற்கு அடுத்தவர்களின் அனுமதியை ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளதாக ஏஎன்ஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"You want to eat beef, then eat. Why Festival? Similarly, a 'Kiss Festival', if you wish to kiss why do you need a festival or anyone's permission for it," Naidu said, while addressing a gathering at
Platinum Jubilee Celebrations of R.A. Poddar College of Commerce. (ANI)

முன்னதாக, ஐஐடி மெட்ராஸில் மாட்டிறைச்சி திருவிழா கடந்த ஜூலை 2017-ல் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல தான் சிறந்த அசைவ உணவு விரும்பி என்றும், தன்னை எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com