இந்திய வம்சாவளியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாமா? பதிலளிக்காத சட்ட அமைச்சகம்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாமா? என்று தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாமா? என்று தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் பிரசாரத்தில் ஈடுபட வந்தனர்.
அப்போது, அவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்கலாமா? என்று அந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியது. ஆனால், அந்த அமைச்சகம் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட அனுமதிப்பது தொடர்பாக எந்தக் கட்சியும் இதுவரை புகார் அளிக்கவில்லை. ஆனால், இதுவொரு புதிய சூழ்நிலை என்பதால் சட்ட அமைச்சகத்திடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த அமைச்சகம் பதிலளிக்கவில்லை. இதற்கு முன்பு, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், சட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டுக் கொள்ளுமாறு அந்த அமைச்சகம் தெரிவித்துவிட்டது.
இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது நுழைவு இசைவு (விசா) விதிகளை மீறுவது போல் ஆகிவிடுமா? என்ற கேள்விக்கும் சட்ட அமைக்கசம் பதிலளிக்கவில்லை.
அவர்கள் இந்தியாவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், வேறு எந்தச் சட்டமாவது அதற்கு தடை விதிக்கிறதா? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com