உ.பி. இடைத் தேர்தல்களில் சமாஜவாதி கட்சிக்கே வெற்றி: அகிலேஷ் நம்பிக்கை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தல்களில் சமாஜவாதி கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.
உ.பி. இடைத் தேர்தல்களில் சமாஜவாதி கட்சிக்கே வெற்றி: அகிலேஷ் நம்பிக்கை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தல்களில் சமாஜவாதி கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.
லக்னௌவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு பிராணவாயு பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தன. ஆனால் அதுதொடர்பாக மாநில அரசு எந்ச நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கோரக்பூர் மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டதாகவும், அதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் நேரத்தில் பாஜக தெரிவித்த பொய்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக மக்கள் நினைக்கின்றனர். ஆதலால், மாநிலத்தில் விரைவில் நடக்கவுள்ள இடைத் தேர்தல்களில் சமாஜவாதி கட்சிக்கே வெற்றி கிடைக்கும். மக்களவைத் தேர்தல், மாநில சட்டப் பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மக்களிடம் எங்கள் கட்சி எடுத்துச் சென்று பிரசாரம் செய்யும். உண்மையை வெளிக் கொண்டு வருவதற்கு எங்கள் கட்சி முயற்சி எடுக்கும்.
முன்பு தேநீரை வைத்து பாஜக மக்களை குழப்பியது. இதேபோல், தற்போது பக்கோடாவை வைத்து மக்களை குழப்பி வருகிறது. இடைத் தேர்தல்களில் காங்கிரஸýம், சமாஜவாதியும் தனித்தனியாக போட்டியிடுவது குறித்து கேட்கிறீர்கள். தேர்தலில் மதவாத சக்திகளை தோற்கடிப்பதுதான் எங்களது பொதுவான நோக்கமாகும். மத்தியில் பாஜக அரசின் ஆட்சிக்காலத்தில், வங்கிகளிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வாங்கும் நபர்கள், பின்னர் நாட்டை விட்டு தப்பியோடுவது வாடிக்கையாகி விட்டது.
எனது அரசு ஆட்சியிலிருந்தபோது, மக்களுக்கு லேப் டாப்புகள் கொடுக்கப்பட்டபோது, யாதவ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படுவதாக பாஜக குற்றம்சுமத்தியது. லக்னௌ எக்ஸ்பிரஸ் விரைவு சாலையை அமைத்தபோது, அது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கானது என்று பாஜக தெரிவித்தது. அதேநேரத்தில், முன்னேற்றத்துக்காக வாக்களியுங்கள் என்று தெரிவித்து, தேர்தலில் பாஜக வென்றுள்ளது. இதுபோல், எப்படி அக்கட்சி பொய்களை பேசுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.
வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு: கோரக்பூர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில், சமாஜ்வாதி வேட்பாளராக பிரவீன் குமார் நிஷாத் போட்டியிடுவார். அவர், நிஷாத் கட்சித் தலைவர் சஞ்சய் நிஷாத்தின் மகன் ஆவார். பூல்பூர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி நிர்வாகி நாகேந்திர பிரதாப் சிங் படேல் போட்டியிடுவார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com