கர்நாடகம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மார்ச் இறுதியில் வெளியீடு

மார்ச் மாத இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடகம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மார்ச் இறுதியில் வெளியீடு

மார்ச் மாத இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசியது: பிப். 27-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பாதுகாப்பு குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவில் ஒப்பந்த அடிப்படையில் பலர் வேலை பார்ப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அவர்களின் பணிக்கான பாதுகாப்பு அளிப்பது, பணிக்கேற்ற ஊதியம் வழங்குவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மார்ச் இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் கடந்த 5 ஆண்டில் நிறைவேற்றியுள்ளது. இதனால் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதே போல், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் எங்கள் ஆட்சியில் நிறைவேற்றித் தருவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com