தெலங்கானாவில் இன்று தகவல் தொழில்நுட்ப மாநாடு: பிரதமர் மோடி உரை

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நாஸ்காம் இந்தியா தலைமை மாநாடு (ஐஎல்எஃப்), தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உலக காங்கிரஸ் மாநாடு ஆகியவை திங்கள்கிழமை தொடங்குகிறது.
தெலங்கானாவில் இன்று தகவல் தொழில்நுட்ப மாநாடு: பிரதமர் மோடி உரை

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நாஸ்காம் இந்தியா தலைமை மாநாடு (ஐஎல்எஃப்), தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உலக காங்கிரஸ் மாநாடு ஆகியவை திங்கள்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் வர்த்தக அமைப்பான நாஸ்காம் சார்பில் 26-ஆவது ஐஎல்எஃப் மாநாடும், 22-ஆவது உலக காங்கிரஸ் மாநாடும் திங்கள்கிழமை தொடங்குகிறது. 
உலக காங்கிரஸ் மாநாட்டில் காணொலி (விடியோ கான்ஃபரன்ஸிங்) முறையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார். இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தெலங்கானா அரசு ஆதரவளித்துள்ளது. ஹைதராபாதில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமை வரை இந்த மாநாடுகள் நடைபெறவுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் இந்த மாநாடுகளில் பங்கேற்று உரை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவரும் கனடா அரசின் புத்தாக்கம், அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான நவ்தீப் பைன்ஸ், பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், மென்பொருளாளரான அடோப் நிறுவனத்தின் தலைவர் சாந்தனு நாராயண், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஈஷா யோகா மையத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் இந்த மாநாடுகளில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஃபார்ச்சூன்' பத்திரிகையில் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்ற 500 நிறுவனங்களின் 20 முதன்மைச் செயல் அதிகாரிகள், 100 செயலர்கள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மாநாடுகளில் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com