மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

நாட்டில் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை உறுதியாக அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல்
மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

நாட்டில் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை உறுதியாக அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் அனுஜ் சக்சேனா, பிருத்வி ராஜ் சௌஹான், பிரியா சர்மா ஆகியோர் பொது நல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாட்டின் மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள், 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மக்கள்தொகை எண்ணிக்கை 150 கோடியை தாண்டும் எனத் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை பெருக்கத்தால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, எழுத்தறிவின்மை, மோசமான சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை நேரிடுகின்றன.
ஆதலால், மக்க தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்பது தொடர்பான கொள்கையை ஊக்குவிக்க திட்டங்களை வகுக்கும்படியும், இந்த கொள்கையை பின்பற்றாத நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
உலகிலேயே இந்தியாவில்தான் இளைஞர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆனால், மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 1951ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், 36.1 கோடியாக இந்தியாவின் மக்கள்தொகை இருந்தது. ஆனால், இதே எண்ணிக்கை கடந்த 2011ஆம் ஆண்டில் 100.21 கோடியாக அதிகரித்து விட்டது என்று அந்த பொது நல மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் அனுபம் வாஜ்பாயும் தனியாக வழக்குத் தாக்கல் தொடுத்தார். அதில், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கம் இயற்கை வளங்களின் அழிவுக்கு வழிவகுத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com