நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் காக்கக் கூடாது: சித்தராமையா 

தொழிலதிபர் நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் காக்கக் கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் காக்கக் கூடாது: சித்தராமையா 

தொழிலதிபர் நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் காக்கக் கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து ராய்ச்சூருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி உத்தரவாத கடிதங்களை பெற்று, பல்வேறு வங்கிகளில் ரூ.11,400 கோடி மோசடி செய்துள்ளது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் தொழிலதிபர் நீரவ் மோடி மீது புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் காத்துக் கொண்டிருக்கிறார். வழக்கமாக பிரதமர் மோடி ஊடகங்களிடம் அடிக்கடி பேசும் இயல்பு கொண்டவர் அல்ல. 
ஆனால், தொழிலதிபர் நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் காக்கக் கூடாது. தனது மெளனத்தை கலைக்கும் நேரம் பிரதமர் மோடிக்கு வந்துள்ளது. 
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. மாநிலத்தில் மஜத பலவீனமாக உள்ளது. அதேபோல, தேசிய அளவில் பகுஜன்சமாஜ் கட்சிக்கு போதுமான செல்வாக்கு இல்லை. இந்நிலையில், இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதால் அரசியல் ரீதியாக காங்கிரசுக்கு எந்த தொந்தரவும் இல்லை. பெங்களூரு, சாந்திநகர் தொகுதி எம்.எல்.ஏ. என்.ஏ.ஹாரீஸ் மகன் முகமது நலபாட், வித்வத் என்பவரை தாக்குதல் நடத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
பேட்டியின் போது, போக்குவரத்து துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com