ராஜஸ்தான் சிலிண்டர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விருந்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விருந்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
அஜ்மீர் மாவட்டம், பெவார் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டல் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில், 9 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. மேலும் 9 பேரின் சடலங்கள், இடிபாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர்த்து, 18 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினர். 5 பேரது நிலை கவலையளிக்கும் நிலையில் உள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கட்டட இடிபாடுகளில் 2 பேர் இன்னமும் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, மீட்பு பணிகளை முதல்வர் வசுந்தரா ராஜே சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தும் அவர் தனது ஆறுதலை தெரிவித்தார். முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கவும் வசுந்தரா ராஜே உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com