ஒடிஸா: மேலும் ஒரு நடிகை பாஜகவில் இணைந்தார்

ஒடிஸா மாநிலத்தில் பாஜகவில் மேலும் ஒரு நடிகை திங்கள்கிழமை இணைந்துள்ளார்.
ஒடிஸா: மேலும் ஒரு நடிகை பாஜகவில் இணைந்தார்

ஒடிஸா மாநிலத்தில் பாஜகவில் மேலும் ஒரு நடிகை திங்கள்கிழமை இணைந்துள்ளார்.
புவனேசுவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் ஒடியா மொழி மூத்த நடிகையான அபராஜிதா மொஹந்தி இணைந்தார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார். பாஜகவில் இணைந்தது குறித்து அபராஜிதா மொஹந்தி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தத்தால் கவரப்பட்டு, பாஜகவில் இணைந்துள்ளேன்' என்றார். அவர் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டாக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக, பாஜகவில் மூத்த நடிகை மகாஸ்வேதா ராய் கடந்த வாரம் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com