வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை மனு

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், தனக்கு எதிராக தெலங்கானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை மனு

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், தனக்கு எதிராக தெலங்கானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது கண் ஜாடை மூலம் ஒரே நாளில் இணையதளத்தில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர், கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். 
இவர் நடித்துள்ள "ஒரு அடார் லவ்' என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தத் திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் இணையதளத்தில் வெளியானது. அந்தப் பாடலில், பிரியா பிரகாஷ் நடித்துள்ளனார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள ஃபலக்னாமா காவல் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், இணையத்தில் வெளியான அந்தப் பாடலின் வரிகள் முஸ்லிம் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 
அதே நாளில், அந்தப் பாடலை யூ-டியூப் இணையதளத்தில் இருந்து நீக்கக் கோரி, பிரியா பிரகாஷுக்கு எதிராக மும்பையில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நடிகை பிரியா பிரகாஷ் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "ஒரு அடார் லவ்' படத்தின் பாடல் வரிகளை 40 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் பாடி, கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், திடீரென்று எந்தவிதக் காரணமுமின்றி முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துரிமைகளை முடக்கும் இதுபோன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் பிரியா பிரகாஷ் வாரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com