நடிகை பிரியா வாரியருக்கு எதிரான வழக்குகள் மீது இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

மலையாள நடிகை பிரியா வாரியருக்கு எதிரான வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகை பிரியா வாரியருக்கு எதிரான வழக்குகள் மீது இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

மலையாள நடிகை பிரியா வாரியருக்கு எதிரான வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'ஒரு அடார் லவ்' எனும் திரைப்படத்தில் உள்ள பாடல் ஒன்றில் இடம்பெற்றிருக்கும் வரிகள், குறிப்பிட்ட ஒரு மதத்தின் உணர்வுகளை காயப்படுத்துவது போல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது தெலங்கானா காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், மேலும் பல மாநிலங்களிலும் அவருக்கு எதிராகவும், 'ஒரு அடார் லவ்' படத்தின் இயக்குநர் ஒமர் லூலு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிரியா வாரியர் சார்பில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தெலங்கானா காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும், பிற மாநிலங்களில் தனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்ய தடை விதிக்கக்கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மத உணர்வுகளை புன்படுத்துவது போல், ஒரு அடார் லவ் படத்தில் இருக்கும் பாடல் வரிகள் இருக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரியா வாரியர், ஒரு அடார் லவ் பட இயக்குநர் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள விடியோவை அடிப்படையாக வைத்து, பிரியா வாரியர், ஒமர் லூலு ஆகியோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
பிரியா வாரியரின் மனு குறித்து பதில் கேட்டு, தெலங்கானா அரசு உள்ளிட்டோரின் பதிலைக் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
18 வயதாகும் பிரியா வாரியர், ஒரு அடார் லவ் மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பு, அப்படத்திலுள்ள பாடல் காட்சிகள் விளம்பரத்துக்காக முன்கூட்டியே வெளியிடப்பட்டன. இதனால், படம் வெளியாவதற்கு முன்பே, பிரியா வாரியருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com