நாகாலாந்து பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 59 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்: ஆய்வில் தகவல்

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இம்மாதம் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 59 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று ஆய்வில் தெரிவிய வந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இம்மாதம் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 59 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று ஆய்வில் தெரிவிய வந்துள்ளது.
நாகாலந்து சட்டப் பேரவையில் உள்ள 60 இடங்களுக்கு வரும் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் 196 வேட்பாளர்களில் 193 பேரின் வேட்பு மனுக்களை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு ஆராய்ந்தது. அதில் தெரிய வந்த விவரங்களை நாகாலாந்தைச் சேர்ந்த இளைஞர் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த ஹெக்கானி ஜக்காலு என்பவர் கொஹிமாவில் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில் 'மூன்று வேட்பாளர்களின் விவரங்களை ஆராய முடியவில்லை. ஏனெனில், அவர்களின் வேட்பு மனுக்களில் உள்ள விவரங்கள் தெளிவாக இல்லை' என்றார்.
அவர் வெளியிட்ட ஆய்வில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:
நாகாலாந்தில் போட்டியிடும் 114 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாவர். அவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி லோதாவுக்கு ரூ.22.81 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளன. அவரது அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.38.69 கோடியாகும். இரண்டையும் சேர்த்தால் ரூ.38.92 கோடி சொத்துகள் உள்ளன. ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வோர்க்கா மாவட்டத்தில் உள்ள சானிஸ் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
நாகாலாந்து முதல்வர் டி.ஆர்.ஜீலியாங், பெரன் தொகுதியில் இருந்து நாகா மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3.52 கோடி சொத்துகள் உள்ளன. முன்று முறை முதல்வராக இருந்தவரும் என்டிபிபி கட்சி வேட்பாளருமான நெய்பியூ ரியோவிற்கு ரூ.15.37 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருக்கின்றன. மற்றொரு முன்னாள் முதல்வரான கே.எல்.சிஷிக்கு ஒட்டுமொத்தமாக ரூ.38.20 கோடி சொத்துகள் இருந்தாலும் அவருக்கு வேட்பாளர்களிலேயே அதிகபட்சமாக ரூ.89 லட்சம் கடனும் இருக்கிறது.
மொத்த வேட்பாளர்களில் 46 பேருக்கு ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துகளும், 42 பேருக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமான சொத்துகளும் உள்ளன. சுமார் 60 வேட்பாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கும் கூடுதலான சொத்துகளும், 26 பேருக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான சொத்துகளும், 19 பேருக்கு ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலான சொத்துகளும் இருக்கின்றன.
காஸ்பானி-1 தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் அகாவி என்.ஜிமோமி என்பவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் ஏதுமில்லை. குறைந்த சொத்துகள் உள்ள வேட்பாளர்களாக டி.என்கம்பாய், சிங்கை கொன்யா, கே.கிகோ கோன்யாக் ஆகியோர் உள்ளனர். 
டி.என்கம்பாய், காங்கிரஸ் சார்பில் போம் சிங் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ரூ.5,000 மதிப்பிலான சொத்துகளே உள்ளன. கொன்யா, நாகா மக்கள் முன்னணி சார்பில் தெஹோக் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ரூ.10,000 கோடி சொத்து உள்ளது. அதேபோல் என்டிபிபி கட்சி சார்பில் மோகா தொகுதியில் போட்டியிடும் கே.கிகோ கொன்யாக்கிற்கு ரூ.20,000 மதிப்பிலான சொத்துகள் மட்டுமே உள்ளன.
மூன்று வேட்பாளர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவர்கள் நாகா மக்கள் முன்னணி, பாஜக, என்டிபிபி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com