நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு கருவிகளை இந்தியாவுக்கு வழங்குகிறது பிரிட்டன் நிறுவனம்

நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து மீட்கும் அதிநவீன கருவிகளை அடுத்த மாதத்தில் இந்தியக் கடற்படைக்கு வழங்க உள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து மீட்கும் அதிநவீன கருவிகளை அடுத்த மாதத்தில் இந்தியக் கடற்படைக்கு வழங்க உள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது. அவற்றை வடிவமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையில் அந்தக் கருவிகள் சேர்க்கப்பட்டால் இந்தியாவின் பாதுகாப்பு வலிமை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேஎஃப்டி என்ற ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பல்கள் சார்ந்த அதிநவீன சாதனங்களை தயாரித்து வருகிறது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்புத் தளவாடங்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியக் கடற்படையுடன் ஜேஎஃப்டி நிறுவனம் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு வாகனங்கள், சாதனங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு வழங்குவதென உடன்படிக்கை கையெழுத்தானது.
அதில் முதல்கட்டமாக இருவேறு அதி நவீன கருவிகளை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக ஜேஎஃப்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றை சோதனைக்குட்படுத்தி தரச்சான்று அளித்த பின்பு இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
இன்னமும் ஒரு மாதத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து மீட்கும் கருவிகள் கடற்படையில் இணைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com