மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் எளிதாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியும்

ஊழல்வாதிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழிவகையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்
மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் எளிதாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியும்

ஊழல்வாதிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழிவகையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டினார். 
இதுகுறித்து 'பீப்பிள்ஸ் டெமாகிரஸி' செய்தித்தாளின் தலையங்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்து பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. வங்கித் துறை வரலாற்றில் இதற்கு முன்பு இத்தனை பெரிய முறைகேடு அரங்கேறியிருக்கவில்லை. நீரவ் மோடி, அவரது உறவினரான மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். இவர்கள் தப்பிச் சென்ற பிறகே இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்து, சிபிஐ வழக்கை விசாரிக்க தொடங்கியிருக்கிறது.
பாஜக மூத்த தலைவர்கள் சிலர், நீரவ் மோடி மற்றும் சோக்ஸியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியிருக்கின்றனர். மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால், பிரான்ஸ் நிறுவனத்துடன் ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு, நீரவ் மோடி விவகாரம் ஆகியவை தெரியவந்ததால், பாஜக அரசின் நிஜமுகம் வெளிப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் இருந்தவர்களுக்கு எதிராக ரூ.8,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் ரூ.60ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி தகவல் அறியும் சட்டத்தின்மூலம், கிடைக்கப்பெற்ற தகவலில் தெரியவந்துள்ளது.
வங்கிகளில் தாராளமயத்தை புகுத்தியதால் ஏற்பட்ட விளைவுதான் இந்த மோசடிகள் செய்வதற்கு காரணமாகிறது. வங்கித் துறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று அதில் பிரகாஷ் காரத் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com