இந்தியர்களைக் குறித்த நெஞ்சைப் பதற வைக்கும் ஆய்வு முடிவு

இப்படித்தான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தாலும் இந்தியர்களைக் குறித்த இந்த ஆய்வு முடிவு சற்று அதிர்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது.
இந்தியர்களைக் குறித்த நெஞ்சைப் பதற வைக்கும் ஆய்வு முடிவு


புது தில்லி: இப்படித்தான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தாலும் இந்தியர்களைக் குறித்த இந்த ஆய்வு முடிவு சற்று அதிர்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது.

டிஜிட்டல் உலகில் வளரும் இளைய தலைமுறையில் 33 சதவீதம் பேர் தாங்கள் மிகவும் நேசிக்கும் நபர்களை விடவும், தங்களது ஸ்மார்ட்ஃபோன்களைத்தான் தங்களது உயிருக்கும் மேலாக நினைப்பதாக அந்த ஆய்வறிக்கைக் கூறுகிறது.

மேலும், இந்தியர்களில் 47 சதவீதம் பேர் தங்களது குடும்பத்தினர் அல்லது மிகவும் நேசிக்கும் நபர்களுடன் தங்கள் நேரத்தை செலவிடுவதை விட, தங்களது ஸ்மார்ட்போனுடன்தான் அதிக நேரத்தை செலவிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனமான மோட்டரோலா, நான்ஸி எட்காஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து நடத்தப்பட்ட 'மனம்-மூளை நடத்தை மற்றும் அறிவியல் காரணங்கள்' என்ற தலைப்பிலான இந்த ஆய்வு கூறுவது என்னவென்றால், தங்களது வாழ்க்கை மீதான கட்டுப்பாடுகளை இழந்து கொண்டிருக்கும் எதிர்கால தலைமுறையினரைக் கொண்டிருக்கிறோம் என்பதே.

உலகில் உள்ள இளம் தலைமுறையில் 53 சதவீதம் பேர், தங்களது ஸ்மார்ட்ஃபோன்தான் நெருங்கிய நண்பன் என்றும், சிறந்த தோழன் என்றும் கூறியுள்ளனர். இப்படிக் கூறியவர்களில் இந்தியாவில் வாழும் 65 சதவீதம் பேர் இதேக் கருத்தைக் கூறி டிஜிட்டல் தலைமுறையினருக்கான பட்டியலில் இந்தியாவை முதல் இடத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

4 பருவ காலங்களையும் மறந்து, நம்மைச் சுற்றியிருக்கும் சுற்றத்தாரையும் மறந்து பல நேரங்களில் தங்களையே மறந்து போகும் இளம் தலைமுறையைத்தான் இந்த டிஜிட்டல் உலகம் வேக வேகமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது வேதனையைத்தான் அளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com