எல்லையில் அமைதியைப் பராமரிக்க இந்தியா - பாகிஸ்தான் உறுதி

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் பாகிஸ்தான் எல்லைக் காவல் படை ஆகியவற்றின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய கொடியமர்வுக் கூட்டத்தில் எல்லையில் அமைதியைப்

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் பாகிஸ்தான் எல்லைக் காவல் படை ஆகியவற்றின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய கொடியமர்வுக் கூட்டத்தில் எல்லையில் அமைதியைப் பராமரிப்பது என்று இரு தரப்பும் தீர்மானித்தன.
ஜம்முவை அடுத்த சர்வதேச எல்லையையொட்டிய சுசேத்கர் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கொடியமர்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினர். இதில் இந்தியத் தரப்பில் பி.எஸ்.திமான் தலைமையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் 9 அதிகாரிகள் பங்கேற்றனர். பாகிஸ்தான் தரப்பில் பங்கேற்ற 11 அதிகாரிகளுக்கு அம்ஜத் ஹுசைன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தின்போது, எல்லையில் அமைதியைப் பராமரிப்பது என்று அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கை:
சர்வதேச எல்லையில் அமைதியைப் பராமரிப்பதற்கான தாம் உறுதிபூண்டிருப்பதை பிஎஸ்எஃப் அதிகாரிகள் வெளிப்படுத்தினர். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் படையினரின் ஒத்துழைப்பை அவர்கள் நாடினர். அதை பாகிஸ்தான் தரப்பும் ஏற்றுக் கொண்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரிடையே கொடியமர்வுக் கூட்டம் நடைபெறுவது ஒரே மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இக்கூட்டம் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. பாகிஸ்தான் தரப்பின் வேண்டுகோளின்படி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் , பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஜனவரி 3-ஆம் தேதியும் 17-ஆம் தேதியும் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பிஎஸ்எஃப் வீரர்கள் பலியானதற்கும், குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கும் இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. 
இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவற்றை சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் அப்போது பாகிஸ்தான் அதிகாரிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com