நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30% போலி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30% போலி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுகுறித்து மும்பையில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
உலகிலேயே இந்தியாவில்தான் ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் எளிதாகும். எனினும், நமது நாட்டில் இருக்கும் ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை ஆகும்.
நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துகள் நேரிடுகின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சாலை பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றவும், விபத்துகளில் உயிரிழப்புகள் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போலி ஓட்டுநர் உரிமங்களுக்கு முடிவு கட்டும் வகையில், தற்போது அவை அனைத்தும் மின்னணு முறையின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இதுதவிர்த்து, 2,000 மோட்டார் பயிற்சி மையங்களும் விரைவில் நாடு முழுவதும் திறக்கப்பட இருக்கின்றன. ஓட்டுநர் தேர்வு முடிந்ததும், சம்பந்தப்பட்ட நபருக்கு 3 நாள்களில் ஓட்டுநர் உரிமத்தை பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஒ) அளிப்பது கட்டாயமாகும் என்றார் கட்கரி.
வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி ஊழல் புரிந்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டது குறித்த கேள்விக்கு, மோசடியாளர்கள் நாட்டுக்கு திரும்ப அழைத்து வரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றார். அவர் மேலும் கூறுகையில், 'மோசடியாளர்களை பாதுகாக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஒவ்வொரு துறையும் நமது நாட்டை முதலிடத்தில் வைப்பதற்கான செயலிலேயே அரசு ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது குறுகிய புத்தியாகும். இக்கோரிக்கையை விடுப்போர், இந்த ஊழலுக்கு யார் பொறுப்பு என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மீது பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் அவருக்குப் பதிலாக நிதின் கட்கரி முதல்வராக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த கேள்விக்கு நிதின் கட்கரி பதிலளிக்கையில், 'தேசிய அளவில் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை திருப்திகரமாக செயல்படுத்தி வருகிறேன். தில்லியில் உணர்வுபூர்வமாக நான் ஐக்கியமாகி விட்டேன். அங்கு நான் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com