சட்டப்பேரவையில் ஒளிபரப்பான ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு: மன்னிப்பு கோரினார் மஹாராஷ்டிரா முதல்வர்! 

திங்களன்று துவங்கிய மஹாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு ஒளிபரப்பான விவகாரத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் மன்னிப்பு கோரினார்
சட்டப்பேரவையில் ஒளிபரப்பான ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு: மன்னிப்பு கோரினார் மஹாராஷ்டிரா முதல்வர்! 

மும்பை: திங்களன்று துவங்கிய மஹாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு ஒளிபரப்பான விவகாரத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் மன்னிப்பு கோரினார்

மஹாராஷ்டிரா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் சி.வி.ராவின் உரையுடன் கூட்டம் துவங்கியது. ஆளுநர் சி.வி.ராவ் எழுந்து நின்று உரையாற்றத் துவங்கிய சில நிமிடங்களிலேயே சட்டப்பேரவை உறுப்பினர்களின் காதுகளில் பொருத்தப்பட்டிருந்த ஹெட்போனில், ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு ஒளிபரப்பாகத் துவங்கியது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் உடனடியாக மராத்தி மொழிபெயர்ப்பு உரையினை  ஒளிபரப்ப வேண்டும் என்று கூச்சலிட்டனர். அத்துடன் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யும் பொருட்டு, ஆளுநர் உரையினை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சபை கூடிய பொழுது மாநில கல்வி அமைச்சரான வினோத் தவ்டே, குஜராத் மொழிபெயர்ப்பு உரை ஒளிபரப்பாகத் துவங்கியதும் தானே நேரடியாக சபை கட்டுப்பாடு அறைக்குச் சென்று சோதித்தாகக் கூறினார். பின்னர் ஆளுநர் உரையின் மராத்தி மொழிபெயரப்பினை அவர் வாசித்தார்.

பின்னர் பேசிய மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீஸ், 'இது மிகப் பெரிய தவறு; கவனிக்க வேண்டிய விஷயமும் கூட, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை நான் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் அவர்கள் மீது திங்கள் அன்று மாலையே நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்காக சபையில் என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்.' என்று தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com