அரசியல் குறித்து ராணுவத் தளபதி கருத்து தெரிவிக்கக் கூடாது: குலாம் நபி ஆஸாத்

அரசியல் குறித்து ராணுவ தலைமைத் தளபதி கருத்து தெரிவிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் குறித்து ராணுவத் தளபதி கருத்து தெரிவிக்கக் கூடாது: குலாம் நபி ஆஸாத்

அரசியல் குறித்து ராணுவ தலைமைத் தளபதி கருத்து தெரிவிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
 தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் பேசுகையில், "இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்தோர் அதிக அளவில் பாகிஸ்தானால் திட்டமிட்டு ஊடுருவ வைக்கப்பட்டனர்; எதிர்காலத்தில் இந்தியாவுடன் போர் மூளும்பட்சத்தில் அவர்களை பயன்படுத்தும் திட்டத்துடன் பாகிஸ்தான் இந்தச் செயலில் ஈடுபட்டது.
 இதனால்தான், 1980ஆம் ஆண்டு காலகட்டத்தில் பாஜகவை விட அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேகமாக வளர்ந்தது' என்றார்.
 அவரது இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறிய
 தாவது:
 சில நாடுகளின் அரசியலில் ராணுவத்தின் பங்கு இருக்கும். ஆனால், நமது நாட்டில் அப்படியில்லை. இவ்வாறு அரசியல் சாயமில்லாமல் நமது ராணுவம் இருப்பது பெருமையளிக்கும் விஷயமாகும். நாடு சுதந்திரம் பெற்றது முதல், ராணுவம் அரசியல் சார்பில்லாத அமைப்பாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டும்.
 நாட்டின் பாதுகாப்பை கவனித்து வரும் ராணுவத்தின் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளோம். எனவே, நாட்டில் எந்த அரசியல் கட்சி வேகமாக வளர்கிறது, அக்கட்சிக்கு எங்கிருந்து ஆதரவு கிடைக்கிறது என்பது குறித்து ராணுவம் கவலைப்படக் கூடாது என்றார் ஆஸாத்.
 இதுதொடர்பாக அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் கூறியபோது, அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி விபின் ராவத் பேசியுள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com