மாநிலங்களவை சீட் இல்லையா?: பாஜகவுக்கு டாடா சொன்ன பிகார் முன்னாள் முதல்வர்! 

தாங்கள் கேட்ட ஒரேயொரு மாநிலங்களவை சீட் மறுக்கப்பட்டதால் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி  அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை சீட் இல்லையா?: பாஜகவுக்கு டாடா சொன்ன பிகார் முன்னாள் முதல்வர்! 

பாட்னா: தாங்கள் கேட்ட ஒரேயொரு மாநிலங்களவை சீட் மறுக்கப்பட்டதால் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி  அறிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர் ஜிதன் ராம் மஞ்சி. பின்னர் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி என்னும் புதிய கட்சியினைத் துவங்கினார். நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் பாஜக ஆதரவுடன் பிகார் முதல்வரானார்.

அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் பிகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் தோல்வியே கிடைத்தது.

இந்நிலையில் விரைவில் 57 இடங்களுக்கு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சிக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என பாஜக மேலிடத்திடம் இக்கட்சி கோரிக்கை வைத்தது.  அவ்வாறு சீட் வழங்க முடியாது என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவளிக்க முடியாது எனவும் கூறியது.

ஆனால் இந்த மிரட்டலை பாஜக தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி அறிவித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் சேர உள்ளதாகவும் ஜிதன் ராம் மஞ்சி  அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com