அஸ்ஸாமிலிருந்து மேற்குவங்கத்தினரை வெளியேற்ற மத்திய அரசு சதி: மம்தா குற்றச்சாட்டு

அஸ்ஸாமில் தங்கி பணிபுரிந்துவரும் மேற்கு வங்கத்தினரை வெளியேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு சதி செய்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
அஸ்ஸாமிலிருந்து மேற்குவங்கத்தினரை வெளியேற்ற மத்திய அரசு சதி: மம்தா குற்றச்சாட்டு

அஸ்ஸாமில் தங்கி பணிபுரிந்துவரும் மேற்கு வங்கத்தினரை வெளியேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு சதி செய்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
அஸ்ஸாம் எல்லையில் வங்கதேசம் இருப்பதால் சட்ட விரோத குடியேற்றங்களுக்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் கண்காணிக்கும் நோக்கில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் குடிமகன்களுக்கான தேசிய பதிவேடு (என்ஆர்சி) கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதன் முதல் வரைவு அறிக்கை கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 
இந்நிலையில், அங்கு பணிபுரிந்துவரும் மேற்கு வங்கத்தினரை வெளியேற்றும் நோக்கில் இத்தகைய கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருதாக மம்தா குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க மாநிலம், அமோத்பூர் நகரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அஸ்ஸாமில் மேற்கு வங்கத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். என்ஆர்சி கணக்கெடுப்பை நடத்தி அவர்களை வெளியேற்ற மத்திய அரசு சதித் திட்டம் தீட்டி வருகிறது. நெருப்புடன் பாஜக அரசு விளையாடக் கூடாது என்று எச்சரிக்கிறேன். பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய அரசு கையாளக் கூடாது.
சொந்த மாநிலத்திலிருந்து இதர மாநிலங்களுக்கு பணிபுரியச் செல்வது ஒருவரிடன் தனிப்பட்ட உரிமை. பணி செய்ய வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மேற்கு வங்கத்திலேயே நிரந்தரமாகி தங்கிவிடுகின்றனர். 
இதுபோல், அஸ்ஸாமிலும் சிலர் தங்க நேரிடலாம்.
பாதிக்கப்படும் மக்களுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எப்போதும் குரல் கொடுக்கும். அஸ்ஸாமில் இருக்கும் மேற்கு வங்கத்தினர் பாதிக்கப்பட்டால், நாங்கள் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க மாட்டோம்.
அதேநேரம், மேற்கு வங்கத்தில் இருக்கும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்களை எங்களது நண்பர்களாகக் கருதி பாதுகாப்போம் என்றார் மம்தா.
'முத்தலாக் மசோதா குறைபாடுகள் கொண்டது': அகமதுபூரில் புதன்கிழமை நடைபெற்ற மற்றொரு பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்க வகை செய்யும் மசோதா குறைபாடுகள் கொண்டது. முஸ்லிம் பெண்களுக்கு நன்மையைக் காட்டிலும் பாதிப்பையே இந்த மசோதா ஏற்படுத்தும். இந்த மசோதாவைக் வைத்து பாஜக அரசியல் செய்கிறது' என்றார்.
பாஜக தாக்கு: மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவான ஹிந்துக்களின் வாக்குகளை தடுத்து நிறுத்தும் நோக்கில், மிதமான ஹிந்துத்துவ கொள்கையை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடைப்பிடித்து வருகிறார் என்று அந்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com