உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்த வார்டு பாய்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு பதிலாக வார்டு பாய் ஒருவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது தொடர்பான விவகாரத்தில் அந்த மாநில அரசுக்கு

உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு பதிலாக வார்டு பாய் ஒருவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது தொடர்பான விவகாரத்தில் அந்த மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாராபங்கி மாவட்டத்திலுள்ள சாரா கோபி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவருக்குப் பதிலாக அங்குள்ள வார்டு பாய் அறுவைச் சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்திகள் ஊடகத்தில் வெளியாகின.
இதை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பாராபங்கி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் சரிவர வரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை; மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அங்கிருக்கும் ஊழியர்களும் சரியாக நடந்து கொள்வதில்லை என்றும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
இதுபோன்ற நிலையால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது அப்பாவி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஆதலால், இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த மருத்துவமனையில வார்டு பாயாக பணிபுரியும் நபர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மருத்துவர் விடுமுறையில் சென்றிருந்த காரணத்தினால், தாம் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com