மாநிலங்களவைத் தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி: குமார் விஸ்வாஸ் அதிருப்தி

மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் (46) , நாராயண் தாஸ் குப்தா (72), சுஷீல் குப்தா (56) ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில்,
மாநிலங்களவைத் தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி: குமார் விஸ்வாஸ் அதிருப்தி

மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் (46) , நாராயண் தாஸ் குப்தா (72), சுஷீல் குப்தா (56) ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், அக்கட்சி தொடக்கத்திலிருந்தே கேஜரிவாலுடன் இருக்கும் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸின் பெயர் இடம்பெறாததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுக் கூட்டமும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டமும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இக்கூட்டங்களில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நாட்டுக்கு சேவையாற்றியவர்களை மாநிலங்களவைக்கு தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று கருதினோம். நாட்டுக்கு பெரிய அளவில் சேவையாற்றிய 18 நபர்களின் பெயர்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊடகம், பொருளாதாரம், நீதித் துறை, கல்வித் துறை ஆகிய துறைகளில் பங்களித்தவர்களின் பெயர்களும் அதில் அடக்கம். அவர்களை அணுகிய போது மிகவும் தன்னடக்கத்துடன் போட்டியிட மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 11 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் கட்சிக்கு அளித்த பங்களிப்பு உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்பட்டன. இதையடுத்து, சஞ்சய் சிங், நாராயண் தாஸ் குப்தா, சுஷீல் குப்தா ஆகிய மூன்று பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. சஞ்சய் சிங் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வருகிறார். நாராயண் தாஸ் குப்தா வரித் துறையிலும், சுஷீல் குப்தா கல்வித் துறையிலும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர் என்றார் மணீஷ் சிசோடியா. மாநிலங்களவைத் தேர்தலில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடத் திட்டமிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கட்சியின் வேட்பாளர்கள் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குமார் விஸ்வாஸ் சாடல்: இதனிடையே, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
துல்லியத் தாக்குதல், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு, பஞ்சாப் பயங்கரவாதிகள் மீதான மென்மையான அணுகுமுறை, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக அரவிந்த் கேஜரிவாலின் முடிவுகள் பற்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உண்மையைப் பேசி வருகிறேன். அதற்கான தண்டனைதான் இந்தப் பரிசு. நான் வீரமரணம் எய்திவிட்டதை ஒப்புக் கொள்கிறேன். கேஜரிவாலுக்கு பாராட்டுகள் என்றார் குமார் விஸ்வாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com