'மிக்' போர் விமானம் விபத்து: விமானி உயிர் தப்பினார்

கோவா மாநில விமான நிலையத்தில், கடற்படைக்குச் சொந்தமான 'மிக் 29கே' போர் விமானம் புதன்கிழமை ஓடுபாதையை விட்டு விலகி, தரையில் மோதி தீப்பிடித்தது. பயிற்சியின்போது நேரிட்ட இந்த விபத்தில்,
கோவாவிலுள்ள தபோலிம் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான கடற்படையின் 'மிக்' ரக போர் விமானம் அருகே திரண்டுள்ள பாதுகாப்புப் படையினர்.
கோவாவிலுள்ள தபோலிம் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான கடற்படையின் 'மிக்' ரக போர் விமானம் அருகே திரண்டுள்ள பாதுகாப்புப் படையினர்.

கோவா மாநில விமான நிலையத்தில், கடற்படைக்குச் சொந்தமான 'மிக் 29கே' போர் விமானம் புதன்கிழமை ஓடுபாதையை விட்டு விலகி, தரையில் மோதி தீப்பிடித்தது. பயிற்சியின்போது நேரிட்ட இந்த விபத்தில், விமானி உயிர்தப்பினார்.
கோவா மாநிலம், தபோலிம் நகரில் உள்ள ஐஎன்எஸ் ஹன்ஸா கடற்படைத் தளத்துக்குள் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஓடுபாதை ஒன்றிலிருந்து 'மிக் 29கே' போர் விமானம் புதன்கிழமை புறப்பட தயாரானது. பயிற்சி விமானி ஒருவர் இயக்கிய அந்த விமானம், ஓடுபாதையிலிருந்து திடீரென விலகி, தரையில் மோதி தீப்பிடித்தது. இதனிடையே, விமானத்திலிருந்து பயிற்சி விமானி பாதுகாப்பாக வெளியேறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தபோலிம் விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக கடற்படை அதிகாரிகள் கூறுகையில், 'மிக் 29கே போர் விமானம் புறப்பட தயாரானபோது அதில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட அந்த தீ, உடனடியாக அணைக்கப்பட்டது' என்றனர். மிக் 29கே போர் விமானம் விபத்துக்குள்ளாவது இதனிடையே, விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, தில்லியில் இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய தயாரிப்பான 'மிக் 29கே' போர் விமானங்கள், கடற்படையில் கடந்த ஆண்டு மே மாதம் இணைக்கப்பட்டன. இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com