யாருடைய மாநிலத்தில் வளர்ச்சி அதிகம்?: டிவிட்டரில் சண்டை போட்டுக் கொண்ட மாநில முதல்வர்கள்! 

யாருடைய மாநிலத்தில் வளர்ச்சி அதிகம் என்று கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்கள் டிவிட்டரில் கிண்டலாக சண்டை போட்டுக் கொண்ட விவகாரம் இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
யாருடைய மாநிலத்தில் வளர்ச்சி அதிகம்?: டிவிட்டரில் சண்டை போட்டுக் கொண்ட மாநில முதல்வர்கள்! 

பெங்களூரு: யாருடைய மாநிலத்தில் வளர்ச்சி அதிகம் என்று கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்கள் டிவிட்டரில் கிண்டலாக சண்டை போட்டுக் கொண்ட விவகாரம் இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் தவறுகளை வெளிக் கொண்டு வரும் விதமாக, அம்மாநில பாரதிய ஜனதா அரசானது 'நவ கர்நாடக பரிவர்தன் யாத்ரா' என்னும் பெயரில் 75 நாள் யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

அவரை வரவேற்கும் விதமாக கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமய்யா டிவிட்டரில் செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தாவது:

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கர்நாடக மாநிலத்திற்கு வரவேற்கிறேன். நீங்கள் எங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் சார். நீங்கள் இங்கு இருக்கும் பொழுது, இந்திரா கேன்டீன் மற்றும் ஒரு நியாய விலைக் கடைக்குச் செல்லுங்கள். இதன்மூலம் சில காலங்களுக்கு முன்பாக உங்கள் மாநிலத்தில் நடைபெற்ற பட்டினிச்சாவுகளைத் எவ்வாறு தடுப்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

இதற்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதிலடி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தாவது:

உங்களது அழைப்பிற்கு நன்றி சித்தராமையாஜி. உங்களது ஆட்சிக் காலத்தில் பட்டினியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம் என்று கேள்விப்பட்டேன். அத்துடன் நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்படுவது, தற்கொலை செய்து கொண்டது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை.

உத்தரப் பிரதேச மாநில முதல்வராக நான் உங்களது கூட்டணிக் கட்சியினர் (சமாஜ்வாதி) செய்துள்ள தவறுகளையும், கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகளையும் சரி செய்யும் முயற்சியில்  உள்ளேன்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் பதில் கொடுத்திருந்தார்.

இதன் காரணமாக யாருடைய மாநிலத்தில் வளர்ச்சி அதிகம் என்று கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்கள் டிவிட்டரில் கிண்டலாக சண்டை போட்டுக் கொண்ட விவகாரம், இணையத்தில் தற்பொழுது வைரலாகப் பரவியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com