புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தது இந்தியாவின் பிரம்மகுப்தா: ராஜஸ்தான் கல்வி அமைச்சர் 'கண்டுபிடிப்பு'!

நியூட்டனுக்கு முன்பாக புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தது இந்தியாவின் பிரம்மகுப்தா என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி தெரிவித்துள்ளார்
புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தது இந்தியாவின் பிரம்மகுப்தா: ராஜஸ்தான் கல்வி அமைச்சர் 'கண்டுபிடிப்பு'!

ஜெய்ப்பூர்:  நியூட்டனுக்கு முன்பாக புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தது இந்தியாவின் பிரம்மகுப்தா என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி  திங்களன்று ராஜஸ்தான் பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்பொழுது அவர் பேசியதாவது:

புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தது சர் ஐசக் நியூட்டன் என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம். ஆனால் ஆழமாகப் பார்த்தோமானால் நியூட்டனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் பிரம்மகுப்தா (இரண்டாம்) புவியீர்ப்பு விசை பற்றிய கொள்கையினை வெளியிட்டுள்ளார். நான் ஏன் இதனை நமது பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாசுதேவ் தேவ்னானி ஒன்றும் சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல. கடந்த ஆண்டு இவர் உலகிலேயே பசு ஒன்றுதான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com