சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5-இல் தொடக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளன.
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5-இல் தொடக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளன.
இதில், 10-ஆம் வகுப்புத் தேர்வில், நாடு முழுவதும் 16,38,522 மாணவர்களும், 12-ஆம் வகுப்புத் தேர்வில் 11,86,144 மாணவர்களும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10-ஆம் வகுப்புக்கு தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்ப பாடம், முதல் தேர்வாக நடத்தப்படவுள்ளது. 12-ஆம் வகுப்புக்கு ஆங்கிலம் முதல் தாள் முதல் தேர்வாக நடத்தப்படுகிறது.
10ஆம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 4-ஆம் தேதி வரையும், 12-ஆம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 12-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்வுகள் தொடங்கவிருப்பதையொட்டி, செய்முறைத் தேர்வுகளை இம்மாத மத்தியில் தொடங்கி 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யும்படி தனது கட்டுப்பாட்டுக்குள்பட்ட பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com