சீனாவை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிடம் உள்ளது: ராணுவ தளபதி பிபின் ராவத்

சீனா எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிடம் இருப்பதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சீனாவை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிடம் உள்ளது: ராணுவ தளபதி பிபின் ராவத்

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சீனா ராணுவம் தலைசிறந்த கட்டைமைப்பு கொண்டது. இருந்தாலும் அதைக் கண்டு நாம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சீனாவை எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திடம் உள்ளது. 

தற்போது இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன ரக பாதுகாப்பு உபகரணங்கள் நம்மிடம் உள்ளது. அதேபோன்று உலகளவில் தலைசிறந்த ஆயுதங்களும் தயார் நிலையில் இருக்கிறது.

இந்தியவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு படைகளை உடனடியாகவும், துரிதமாகவும் செயல்பட்டு கொண்டு சேர்ப்பதில் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறோம்.

நேபால், பூடான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். டோக்லாம் எல்லையைப் பொறுத்தவரையில் இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டுள்ள போதிலும், எந்த சூழலிலும் அடுத்த நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

அதேபோன்று சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் இதில் மிக திறமை வாய்ந்ததகாவும், பாதுகாப்பானதாகவும் செயல்படுகிறது.

அண்டை நாடுகளுடனான உறவில் இந்திய அரசு எப்போதும் சுமூக நிலையை மட்டுமே விரும்புகிறது. எனவே அதன்படி இந்திய ராணுவமும் செயல்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com