நாடு கடத்தப்படுதல் தொடர்பான வழக்கு :விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2 வரை ஜாமீன்

நாடு கடத்தப்படுதல் தொடர்பான வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி வரை ஜாமீன் அளித்து பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு கடத்தப்படுதல் தொடர்பான வழக்கு :விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2 வரை ஜாமீன்

நாடு கடத்தப்படுதல் தொடர்பான வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி வரை ஜாமீன் அளித்து பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான இறுதி விசாரணை முடிந்து விடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மல்லையா தரப்பில் விசாரணை முடித்துக் கொள்ளப்படவில்லை.
இந்த வழக்கில், இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் தவறானவை என்று நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று மல்லையா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி எம்மா அர்புத்நாட், மல்லையா தரப்பின் கோரிக்கையை ஏற்று, மல்லையாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வரை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
எனினும், இந்த வழக்கு அடுத்து எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், அடுத்த 3 வாரங்களில் ஆதாரம் தொடர்பான வாதங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த 3 வாரங்களில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற வாதத்தை கேட்டுவிட்டு நீதிபதி எம்மா கூறுகையில், 'பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஒருவேளை விஜய் மல்லையா நாடு கடத்தப்படும்பட்சத்தில் அவர் அடைக்கப்பட இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு மத்திய சிறையில் இருக்கும் மருத்துவ உதவி உள்ளிட்டவை குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
அதேபோல், இந்தியத் தரப்பில் விஜய் மல்லையாவுக்கு எதிராக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு நீதிபதி எம்மா உத்தரவிடும்பட்சத்தில், அதுதொடர்பான உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் 2 மாதங்களில் கையெழுத்திடுவார். அதேநேரத்தில், நீதிபதி எம்மாவின் உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உயர் நீதிமன்றங்களில் விஜய் மல்லையாவும், இந்திய அரசும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பளிக்கப்படும்.
இந்திய வங்கிகளில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி கடன்வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு சென்று மல்லையா தஞ்சம் புகுந்துள்ளார். 
இதையடுத்து, அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், இந்திய அரசு சார்பில் சிபிஎஸ் எனப்படும் கிரவுன் புராசிக்யூஷன் சேவை அமைப்பு வாதாடி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com