புதுச்சேரி-பெங்களூரு இடையே பிப். 15 முதல் விமான சேவை

புதுச்சேரி-ஹைதராபாதைத் தொடர்ந்து, புதுச்சேரி-பெங்களூரு இடையே வருகிற பிப்.15-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கவுள்ளது.

புதுச்சேரி-ஹைதராபாதைத் தொடர்ந்து, புதுச்சேரி-பெங்களூரு இடையே வருகிற பிப்.15-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கவுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து கடந்த 17.1.2013 முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. எனினும், பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014, பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 14.4.2015 முதல் விமான சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன்னறிவிப்பின்றி 2015, அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. 
இந்த நிலையில், சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் மத்திய அரசின் உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி அரசின் முயற்சியால் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு, புதுவை-ஹைதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் கடந்த ஆகஸ்ட் 15 முதல் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் விமானம் இயக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது: அதிக வரவேற்பு இருப்பதால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருகிற பிப்.15-ஆம் தேதியில் இருந்து கூடுதல் விமான சேவையாக பெங்களூருக்கு விமானத்தை இயக்குகிறது. பெங்களூரிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் விமானம், காலை 10.30 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். தொடர்ந்து, காலை 10.50 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படும் அந்த விமானம் பகல் 12.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கட்டணம் ரூ. 1,600 என நிர்ணயிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com