பெங்களூர் சிறையில் மௌனமாக இருந்தே சாதித்த வி.கே. சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலா மௌன விரதம் இருந்து வருகிறார்.
பெங்களூர் சிறையில் மௌனமாக இருந்தே சாதித்த வி.கே. சசிகலா


பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலா மௌன விரதம் இருந்து வருகிறார்.

யாருடனும் எதுவும் பேசாமல், தன் வேலையை செய்து வரும் சசிகலா, அங்கு சிறைக் கைதிகளுக்கான கல்வி வழங்கும் சேவையின் கீழ் கன்னடம் பயின்று வருகிறார்.

இளவரசியுடன் தவறாமல் கன்னட வகுப்புக்கு செல்லும் சசிகலா, கன்னட எழுத்துக்களையும், அதனை பிரயோகிக்கும் முறைகளையும் மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகிறார். கன்னடத்தோடு, கணினி அறிவியல் வகுப்பிலும் சசிகலா ஆர்வத்துடன் பங்கேற்கிறார்.

சசிகலா தற்போது மௌன விரதம் இருப்பதால், அவர் கன்னடம் பயில்வதில் எந்த அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது தெரியவரவில்லை. ஆனால், கன்னடம் எழுதுவதில் சிறந்து விளங்குவதாக சிறையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், சசிகலாவுக்கு புத்தக வாசிப்பில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெங்களூர் மத்திய சிறையில் தற்போது ஆண் கைதிகளுக்கான நூலகம் மட்டுமே உள்ளது. ஆனால், சசிகலாவின் ஆர்வம் காரணமாக, பெண் கைதிகளுக்கு என தனியாக நூலகம் அமைக்க சிறைத் துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சிறை நூலகத்துக்கு 91 செய்தித் தாள்களை வாங்கவும், மாதாந்திர, வாராந்திர இதழ்கள் வாங்கவும் 10 ஆயிரத்துக்கும் மேல் சிறைத் துணை செலவிட்டு வருகிறது. விரைவில் பெண் கைதிகளுக்கான நூலகம் திறக்கப்பட உள்ளது. பெண் கைதிகளுக்கான நூலகம் திறப்பதில் வி.கே. சசிகலாவின் பங்கு மிக முக்கியமானது என்றும், நூலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைப்பதிலும் அவர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் சிறையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com