மகாராஷ்டிர வன்முறை: பாஜக-ஆர்எஸ்எஸ் மீது கேஜரிவால் தாக்கு

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான
மகாராஷ்டிர வன்முறை: பாஜக-ஆர்எஸ்எஸ் மீது கேஜரிவால் தாக்கு

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் சாடியுள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலம், புணேயில் கடந்த 1818-ஆம் ஆண்டில் மஹர் எனப்படும் தலித் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அடங்கிய ஆங்கிலேய படையினருக்கும், அப்போதைய ஆட்சியாளர்களான பேஷ்வாக்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயப் படை வென்றது. உயர் ஜாதியினரான பேஷ்வாக்கள் தோற்கடிக்கப்பட்டதால், இப்போரின் வெற்றியை தலித் சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற போர் வெற்றி தின கொண்டாட்டத்தின்போது, கோரிகான் பீமா பகுதியிலுள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு சென்ற தலித்துகளுக்கும் பல்வேறு ஹிந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, புணே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநிலத்தின் இதர பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில், மராட்டிய பேரரசர் சிவாஜியின் தாயார் ஜிஜாபாயின் பிறந்த தினத்தையொட்டி, புல்தானா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பங்கேற்றார்.
அப்போது, அவர் பேசுகையில், 'கோரிகான் பீமாவில் தலித்துகள் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதுவே, வன்முறைச் சம்பவங்களுக்கு வித்திட்டது. ஜாதி, மதம் அடிப்படையில் மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டி, அதன் மூலம் ஆதாயம் அடைவதை பாஜக நோக்கமாக கொண்டுள்ளது' என்றார்.
மேலும், மகாராஷ்டிரத்தில் அரசு பள்ளிகளின் நிலை மோசமடைந்துவிட்டதாகவும், இதற்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். 
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 3 ஆண்டு கால ஆட்சியில், நவீன வசதிகளுடன் கூடிய 300 புதிய பள்ளிகளை தொடங்கியுள்ளோம். தில்லியின் மொத்த பட்ஜெட் தொகையே 40 ஆயிரம் கோடிதான். இருப்பினும், அரசு பள்ளிகளை மேம்படுத்தியுள்ளோம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com