ம.பி.யில் 'பத்மாவத்' திரைப்படத்துக்கு தடை: சிவராஜ் சிங் சௌஹான் சூசகம்

மத்தியப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்படும் என்பதை அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் சூசகமாக தெரிவித்தார்.
ம.பி.யில் 'பத்மாவத்' திரைப்படத்துக்கு தடை: சிவராஜ் சிங் சௌஹான் சூசகம்

மத்தியப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்படும் என்பதை அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் சூசகமாக தெரிவித்தார்.
இதுகுறித்து மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், 'இந்த விவகாரத்தில் நான் ஏற்கெனவே என்ன தெரிவித்திருந்தேனோ, அதுதான் நடக்கும்' என்றார். ஆனால், அதை விரிவாக சௌஹான் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி ராஜபுத்திர இனத்தவ மக்களுடன் சிவராஜ் சிங் சௌஹான் பேசினார். அப்போது அவர், ராணி பத்மாவதியின் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் காட்சிகளோ அல்லது உண்மைகளை திரித்துக் கூறும் வகையிலான காட்சிகளோ, படத்தில் இடம்பெற்றிருந்தால், அந்தப் படத்தை மத்தியப் பிரதேசத்தில் திரையிட அனுமதிக்க மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.
அதையே போபாலில் செய்தியாளர்களிடம் பேசியபோது சிவராஜ் சிங் சௌஹான் மீண்டும் சூசகமாகத் தெரியப்படுத்தினார்.
மும்பையில் ஆர்ப்பாட்டம்: இதனிடையே, பத்மாவத் திரைப்படத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதை கண்டித்து மும்பையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரிய அலுவலகத்துக்கு வெளியே கர்னி சேனா அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
பத்மாவத் திரைப்படத்துக்கு பத்மாவதி என்று முன்பு பெயரிடப்பட்டிருந்தது. 
இந்தப் படத்தில், ராஜபுத்திர ராணி பத்மாவதிக்கு எதிராக கருத்துகள் இருப்பதாக தெரிவித்து, ராஜபுத்திர இனத்தவரும், சில அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. 
இதனால், டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாக இருந்த அந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் படத்தைத் திரையிட அண்மையில் சில நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டது. அதாவது, படத்தின் பெயரை பத்மாவத் என்று மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்டவை அந்த நிபந்தனைகளாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com